தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Saturday, 16 December 2017

அதிரடி ரெய்டு, அபராதம்... யாருக்கும் அஞ்சாத சரயு, யாழினி..! அதிரும் புதுக்கோட்டை

அதிரடி ரெய்டு, அபராதம்... யாருக்கும் அஞ்சாத சரயு, யாழினி..! அதிரும் புதுக்கோட்டை

புதுக்கோட்டை நகரை போட்டிப்போட்டுக்கொண்டு இரண்டு பெண்கள் புதுப்பித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒருவர் உதவி ஆட்சியரான சரயு. மற்றவர், நகராட்சி சுகாதார அலுவலரான யாழினி. இவர்கள் இருவரும் தங்கள் கவனத்துக்கு வரும் மக்கள் விரோத, சட்டவிரோத ரகசியத் தகவல்கள் எதையும் அலட்சியப்படுத்துவதில்லை. அது குறித்து தீர விசாரித்து, தகவலின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்திக் கொண்டு, அதிரடி ஆய்வுக்கு வியூகம் அமைக்கிறார்கள். அந்தவகையில், உதவி ஆட்சியர் சரயு  இதுவரை மூன்று அதிரடி ரெய்டுகளை நடத்தி, சம்பந்தப்பட்டவர்களின் கடைகளுக்கு சீல் வைத்திருக்கிறார். சரயு நடத்திய ரெய்டுகளில் சிக்கியவர்கள் பெரும்பாலும் ஆளுங்கட்சியின் பின்புலம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள சிடி கடையில் ஆபாச வீடியோக்கள் விற்பதாக வந்த தகவலின் அடிப்படையில் சரயு ரெய்டு நடத்தியக் கடையின் உரிமையாளர் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்தான். கடையின் பெயரே 'அம்மா' என்றுதான் இருந்தது. மூன்று வாரங்களுக்கு முன்பு, அரிமளம் பகுதியில் நடத்தப்பட்டு வந்த மதுபான பாரில், தினமும் அதிகாலையிலேயே  கூவிக்கூவி  மதுபானம் விற்கிறார்கள் என்று வந்த தகவலைத் தொடர்ந்து, அதிகாலையே ஆய்வுக்கும் புறப்பட்டுவிட்டார் சரயு. அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மதுபானப் பெட்டிகளைப் பறிமுதல் செய்து, பாருக்கு சீல் வைத்துவிட்டு வந்தார் சரயு.

இவர் இப்படி என்றால், புதுக்கோட்டை நகராட்சி சுகாதார அலுவலரான யாழினியும் தன் பங்குக்கு அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு திருக்கோகர்ணம் பகுதியில் உள்ள மெடிக்கல் ஒன்றில், கடையின் உரிமையாளரே நோயாளிகளுக்கு ஊசி போடுகிறார்  என்று இவருக்கு வந்த தகவலையடுத்து அதிரடியாக அங்கு ஆய்வு செய்து,நோயாளிகளுக்குப் பயன்படுத்திவிட்டு, அப்புறப்படுத்தாமலிருந்த  நூற்றுக்கணக்கான சிரிஞ்சுகளைக் கைப்பற்றி, கடைக்கு சீல் வைத்துவிட்டு வந்தார். சுகாதாரமின்மை, சிறுநீர் நாற்றம் இவைகளுக்கு புகழ் பெற்றது. புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம். இதற்கு முன் எத்தனையோ சுகாதார அலுவலர்கள் முயற்சி செய்தும் பேருந்து நிலையத்தின் அவலத்தை மாற்றமுடியவில்லை. ஆனால், யாழினி அந்த முயற்சியில் ஓரளவு வெற்றிப் பெற்றிருக்கிறார். இரவும் பகலும் சுகாதாரப் பணியாளர்களைக் கொண்டு பேருந்து நிலையத்தைச் சுத்தம் செய்கிறார். கண்ட இடங்களில் சிறுநீர் கழிப்பவர்களுக்கு 100 ரூபாய் அபராதம் என்று எழுதப்பட்ட எச்சரிக்கைப் பலகையைப் பேருந்து நிலையத்தைச் சுற்றியும் பொருத்தி இருக்கிறார். இதனால் இப்போது நாற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது.

தனித்தனியாக இருவரும் நடத்தும் அதிரடி நடவடிக்கைகளைத் தாண்டி, பொதுநலன் சார்ந்த விழிப்பு உணர்வு நடவடிக்கைகளில் சரயுவும் யாழினியும் இணைந்து செயல்படுகிறார்கள். குறிப்பாக, டெங்கு ஒழிப்பு, பிளாஸ்டிக் உபயோகம் தவிர்ப்பு, தூய்மை நகரம் போன்ற திட்டங்களில் மக்களை இருவரும் நேரடியாக சந்தித்து அறிவுரைகள் கூறுகின்றார்கள். அதை மக்களும் ஏற்றுக்கொள்கிறார்கள். மீறினால், அபராதம் விதிக்கவும் இந்த இரண்டு பெண்களும் தயங்குவதில்லை. இவர்களது முயற்சிகளுக்கு எதிரான விமர்சனங்கள் வந்தாலும் அதைப் பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை. கொண்ட கடமையில் கண்ணும் கருத்துமாக இருந்து, மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டையை ஓரளவேனும் 'புதியக்கோட்டை'யாக மாற்றும் முயற்சியில் இந்த இரண்டு பெண்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் என்பதே உண்மை.

Friday, 15 December 2017

குரூப்-4 தேதி நீட்டிப்பு

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க டிசம்பர் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு; தேர்வுக் கட்டணம் செலுத்த டிசம்பர் 21-ம் தேதி வரை கால அவகாசம்- டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு*

ராஜஸ்தானல் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீடியோ

ராஜஸ்தானல் சுட்டுக்கொல்லப்பட்ட இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி வீடியோ

*மேலே உள்ள செய்தியுடன் ஒரு வீடியோவும் வலம் வருகின்றது

*அது பொய்யான செய்தி

*யாரும் நம்பவேண்டாம்

*மேலும் அந்த வீடியோ டெல்லியில்  ஆண்டு நடந்தது இரு ரவுடி கும்பல்களுக்கு இடையில் நடந்த மோதலாகும்

*அந்த வீடியோவில் காட்டப்படும் நபர் போலிஸ் இல்லை

*ஆதாரம்
http://m.indiatoday.in/story/video-shootout-bhajanpura-delhi-rival-gang-police-murder/1/1099898.html

*ஆதாரம்
https://m.youtube.com/watch?v=DTbz8OtdoYY

*​எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்​

🔘➖🔘➖🔘➖🔘

Wednesday, 13 December 2017

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்சம் பேர்  விண்ணப்பித்துள்ளனர்

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வுக்கு இதுவரை 17 லட்சம் பேர் 
விண்ணப்பித்துள்ளனர். 9351 காலி பணியிடங்களுக்கு இன்று மாலை வரை 17 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். பிப்ரவரி 11-ம் தேதி நடைபெறும் தேர்வுக்கு இன்றிரவு 11.59 வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பகோளாறால் விண்ணப்பிக்க முடியாமல் போனால் தேர்வாணையம் பொறுப்பில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி விளக்கம் அளித்துள்ளது.

கார், பைக் ஓட்டுகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.

கார், பைக் ஓட்டுகிற ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய ஒன்று.

📚📖📚📖📚📖📚📖📚

நேரம் இருந்தால் வாசியுங்கள்...மனதை கலங்க செய்யும் வரிகள். படிமங்கள்! அனைவருக்கும்
பகிருங்கள்!!
🤔🤔🤔🤔🤔🤔🤔🤔🤔

சாலைகளுக்குத் தெரியாது
நீ சாதிக்கப் பிறந்தவன் என்று!

விரைந்து செல்லும்
வாகனங்களுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள் வீட்டின்
விடியலென்று......

முந்திச்செல்லும்
முன்னோடிகளுக்குத் தெரியுமா?
நீ தான் எங்கள்
வீட்டின் முகவரி என்று.......

கடந்து செல்லும்
கனரக வாகனங்களுக்குத்
தெரியுமா?
நீ தான் எங்கள்
கண்மணி என்று.,.....

விடியலும்
விலாசமுமாய்
நம்பிக்கையும் எதிர்காலமுமாய்
நம்பியிருக்கிறோம்
உன்னை......

ஐந்து நிமிடங்கள்
காத்திருந்து அடுத்து வரும்
பேருந்திற்காக காத்திருக்க
முடியாத உனக்காக
நீ பிறந்த நாள் முதல்
இன்று வரை காப்பாற்றுவாயென்று
காத்திருக்கிறோம்.....

காலமெல்லாம்
உடனிருப்பேனென்று
கட்டிய தாலி நினைவிருக்கிறதா..
கண்ணாளா?
காத்திருப்பேன் கடைசிவரை

விரல் பிடித்து
நான் நடந்து
கரை தாண்டவும்,
கடல் தாண்டவும் கற்றுக்கொண்ட
உன் நிழல் நான் தந்தையே!
விழித்திருப்பேன்
நீ வரும் வரை...,..

அலுவலகத்திற்குத் தானே
சென்றிருக்கிறாய்;
அப்படியே திரும்பி வருவாயென்று
காத்திருக்கிறோம்

உடையாமலும்
உரசாமலும்
கவனமுடன்
திரும்பி வா!
நீ செல்லும் பாதைகள்
உனக்கு வெறும்
பயணமாக இருக்கலாம் ;
காத்திருக்கும் எங்களுக்குத்தான்
தெரியும் காலனிடம்
போராடிக்
கொண்டிருக்கிறாய்
என்று......

அம்மாவும்,
அப்பாவும்
தம்பியும்,
தங்கையும்
மனைவியும்,
மகளும்
மகனும் என வாழக்கிடைத்த
இந்த வாழ்க்கை
ஒரு வரமென்று
உணர்ந்து கொள்ளுங்கள்!

தொங்கிச் செல்வதும்
துரத்திச் செல்வதும்
உங்கள் குருதியின்
வேகமாக இருக்கலாம்;
ஆனால், விபத்துகளிலிருந்து
எப்போதும் தப்பித்து விடமுடியாது!

விவேகமுடன் செயல்படாவிட்டால்
வீட்டில் காத்திருக்கும்
உயிருக்கும் மேலான உங்கள்
உறவுகளை எல்லாம்
அரசு மருத்துவமனையில்
பிணவறையில் பிரேத
பரிசோதனைக்காக
காத்திருக்க வைத்துவிடும் என்பதை அறிவீர்களோ,....?

அதனால் தயவு செய்து வாகனத்தில் செல்லும் போது மெதுவாக செல்லவும்!

நீங்கள் ஒரு மகனாக இருந்தால்
ஒரு குடும்பத்தின் வாரிசு போச்சு!
கணவனாக இருந்தால் குடும்பம் போச்சு!

தந்தையாக இருந்தால்  ஒரு குடும்பமே
இருண்டு போச்சு!

கண நேர கவனக் குறைவால் கதை முடிகிறது நண்பா!
கவனமாக செல் !
காத்திருக்கின்றன உறவுகள் உனக்காக!

SPEED THRILLS;
BUT KILLS!

THERE IS  *NO RE-PLAY*
IN LIFE!

NO SPARE PARTS AVAILABLE FOR YOUR BODY!

நாம் ஒவ்வொருவரும் நினைக்கிறோம்,
விபத்து நமக்கு ஏற்படாது எனறு-
-அது நமக்கு நடக்கும் வரைதான்!

*மித வேகம் மிக நன்று*

🚴🏼‍♀🚴🏼🚴🏼‍♀🚴🏼🚴🏼‍♀🚴🏼🚴🏼‍♀🚴🏼🚴🏼‍♀

சமூக அக்கறையுடன்
பதிவிடப்படுகிறது!

Thursday, 7 December 2017

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

வேட்புமனு ஏற்கப்பட்டவர்களில் தினகரன் என்ற பெயரில் 4 பேரும், மதுசூதனன் என்ற பெயரில் 3 பேரும் போட்டியிடுகின்றனர்

Saturday, 2 December 2017

ஓகி பெயர் காரணம்

ஓகி என்ற பங்களாதேஷ் சொல்லுக்கு "" கண்"" பொருள்.....
அடுத்து சாகர் என்ற புயல் வரவிருக்கிறதாம் அதற்கு இந்தியா பெயரிட்டுள்ளது ...சாகர் என்றால் "" கடல்"" பொருள்....

2016 ல் வந்த வார்தா புயலுக்கு பாகிஸ்தான் பெயரிட்டது...இதன் பொருள்் "" சிவப்பு ரோஜா"""