flipkart


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Friday, 12 January 2018

ஆதார் இணையதளத்தில் அடிப்படை பாதுகாப்பில் குறைபாடுகள்

🇮🇳  ஆதார் இணையதளத்தில் அடிப்படை பாதுகாப்பில் குறைபாடுகள் உள்ளதாக ஆஸ்திரேலியாவின் தகவல் பாதுகாப்பு அமைப்பான "டிராய் ஹன்ட்" எச்சரித்துள்ளது.இது தொடர்பாக டிராய் ஹன்ட் தனது வலைபக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், இந்தியாவின் ஆதார் முறை உண்மையில் பாதுகாப்பு நிறைந்ததாக இல்லை. யார் வேண்டுமானாலும் அதில் உள்ள தகவல்களை இயக்கும் வகையிலேயே அதன் பாதுகாப்பு உள்ளது. நாங்கள் இந்தியாவின் ஆதார் கொள்கைக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனால், அதன் பாதுகாப்பில் குறைபாடு உள்ளதை சுட்டிக்காட்ட வேண்டிய தேவையும்,மாற்றி அமைக்கப்பட வேண்டிய கட்டாயமும் உள்ளது என தெரிவித்துள்ளது.மேலும், ஹேக்கர்கள் இத்தகைய குறைப்பாட்டை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் ஆதார் இணையதள சர்வரில் உள்ள தகவல்களை திருடி, அவற்றை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு உள்ளது. ஆதார் இணையதள தகவல்களை பாதுகாக்க இந்திய அரசு சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது

No comments:

Post a Comment