flipkart


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Thursday, 8 March 2018

திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா 12.03.2018 அன்று உள்ளூர் விடுமுறை புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

திருவப்பூர் முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா 12.03.2018 அன்று உள்ளூர் விடுமுறை
புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

  அரசு நிலை ஆணை எண்:313, பொது (பல்வகை) துறை நாள்:11.03.1997-இல் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கிணங்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர்                     சு.கணேஷ், இ.ஆ.ப., ஆகிய நான், புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை தாலுகா, புதுக்கோட்டை நகரத்தைச் சேர்ந்த திருவப்பூர் அருள்மிகு ஸ்ரீ.முத்துமாரியம்மன் திருக்கோவில் தேர்திருவிழா 12.03.2018 அன்று நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை எனவும், அதற்கு பதிலாக 24.03.2018 சனிக்கிழமை அன்று பணிநாள் எனவும், வழக்கமாக சனிக்கிழமைகளை பணி நாளாக கொண்ட அலுவலகங்களுக்கு 25.03.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று பணிநாள் எனவும் அறிவிக்கிறேன்.
   இந்த உள்ளூர் விடுறை 1881-ஆம் ஆண்டு செலாவணி முறிச்சட்டத்தின் கீழான விடுமுறை நாள் அல்ல எனவும், இந்த உள்ளூர் விடுமுறை நாளன்று புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மாவட்ட கருவூலகம் மற்றும் சார்நிலை கருவூலகங்களும் குறைந்தபட்ச அலுவலர்களுடன் அரசின் பாதுகாப்பினைக் கருதியும் அவசர அலுவல்கள் மேற்கொள்ளும் பொருட்டும் திறந்திருக்கும் எனவும் அறிவிக்கிறேன். மேலும், அரசு பொதுத்தேர்வுகள், அரசு அறிவித்த தேதிகளில் நடைபெறும் எனவும், இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேற்காணும் தகவலை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சு.கணேஷ் இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment