flipkart


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Friday, 16 March 2018

இன்று உலக தூக்கம் தினம்!


இன்று உலக தூக்கம் தினம்!

இந்த உலகத்தில் நாம கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறது எதுக்குன்னு நினைக்குறீங்ககால் ஜான் வயித்துக்கும், படுத்தா நிம்மதியா தூக்கம் வருவதற்கும் தாங்க. அது இல்லனா எதுக்கு இந்த வாழ்க்கை..? சொல்லுங்க!.

மார்ச் 16… இன்று உலக தூக்க நாளாம். தூக்கத்தின் அருமையை நாம் உணர்வதற்காகவே இந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஸ்லோகம் என்ன தெரியுமா? ‘Join the Sleep World, Preserve Your Rhythms to Enjoy Life’.

பிரிட்டிஷ் ஆய்வு ஒன்று என்ன கூறுகிறது தெரியுமா? நாள் ஒன்றுக்கு 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களும், 10 மணிநேரம் தூங்குபவர்களும் உயிரிழக்கும் அபாயத்தில் உள்ளார்களாம். தினம் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்குவதை வழக்கமாக கொண்டிருப்பவர்களுக்கு ஏனையோரை தவிர கை, கால்., செயல் இழக்கும் (ஸ்டரோக் ) என்ற நிலைக்கு தள்ளப்படுகின்றனராம்.

இவர்களுக்கு ஹைபர்சோமியா என்ற நோய் ஏற்படுகிறது. நீண்டநாள் வாழ்வதும், தூக்கம் என்பதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்று கூறுகிறது அந்த ஆய்வு.

மொத்தத்தில் 6 மணி நேரத்திற்கு குறைவில்லாமலும், 9 மணி நேரத்திற்கு அதிகமாக தூங்காமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். தூக்கம் இல்லாமல் சிரமப்படுபவர்களும், அதிகம் தூங்குபவர்களும் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நலம்.

பிறந்த குழந்தைகள் ( 0 முதல் மூன்று மாதங்கள் வரை) : புதிதாக பிறந்த குழந்தைகள் நாளொன்றுக்கு 14லிருந்து 17 மணிநேரம் வரை தூங்க வேண்டும் ஆனால் 11லிருந்து 13 மணிநேரம் தூங்கினால் கூட போதும். ஒரு நாளுக்கு 19 மணி நேரங்களுக்கு மேல் தூங்கவிடக்கூடாது .

குழந்தைகள் (4-முதல் 11 மாதம் வரை): தினசரி 12லிருந்து 15 மணி நேரங்கள் வரை தூங்கவேண்டும், குறைந்தது 10 மணி நேரங்கள் தூங்கினால் கூட போதும். ஆனால் 18 மணி நேரங்களுக்கு மேல் தூங்கக் கூடாது.

தளிர்நடை பயிலும் குழந்தைகள் ( 1லிருந்து 2 வயது வரை): தினமும் 11லிருந்து 14 மணி நேரங்கள் வரை தூங்க வேண்டும்.

பள்ளி செல்லும் முன் வயதுக் குழந்தைகள் ( 3லிருந்து 5 வயது வரை) : தினமும் 10லிருந்து 13 மணி நேரங்கள் தூங்கவேண்டும் என்பது வல்லுநர்கள் பரிந்துரை. ஆனால் 8 மணி நேரங்களுக்கு குறைவாகவோ அல்லது 14 மணி நேரங்களுக்கு மேலாகவோ தூங்குவது பொருத்தமற்றது என்று கூறப்படுகிறது.

பள்ளி செல்லும் வயது சிறார்கள் ( 6லிருந்து 13 வயது வரை): ஒன்பது மணிநேரத்திலிருந்து 11 மணிநேரம் வரை தினமும் தூங்கவேண்டுமாம். தினமும் 7 மணிநேரத்துக்குக் குறைவான அல்லது 12 மணிநேரத்துக்கு மேலான தூக்கம் ஆரோக்கியமானதல்ல என்றும் கூறுகின்றனர்.

பதின்பருவச் சிறார்கள் (14 முதல் 17 வயது வரை): பரிந்துரைக்கப்பட்ட தூக்க நேரம் என்பது 8லிருந்து 10 மணிநேரம் வரைதான். இந்த வயது சிறார்கள் தினமும் 11 மணி நேரங்களுக்கு மேலாகவோ அல்லது 7 மணிநேரங்களுக்கு குறைவாகத் தூங்குவது தவறு.

வயது வந்த இளைஞர்கள் ( 18லிருந்து 25 வயது வரை): தினமும் 7லிருந்து 9 மணி நேரங்கள் வரை தூங்கலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் தூக்கம் 6 மணிநேரத்துக்குக் குறைவானதாகவோ அல்லது 11 மணி நேரங்களுக்கு மேலோ போகக்கூடாது.

26லிருந்து 64 வயது வரை: மேலே குறிப்பிடப்பட்ட வயது வந்த இளைஞர்களுக்கான அதே பரிந்துரைதான் இவர்களுக்கும்.


65 வயதுஅதற்கு மேல்: ஆரோக்கியமான தூக்கம் என்பது தினசரி 7லிருந்து 8 மணிநேரம் வரை. ஆனால் ஐந்து மணி நேரத்துக்குக் குறைவாகவோ அல்லது 9 மணிநேரத்துக்கு மேலோ போகக்கூடாது என்கின்றனர் ஆய்வாளர்கள்.


உங்க வயதுக்கு நீங்க எவ்ளோ நேரம் தூங்கணும் என்று தெரிந்து கொண்டீர்கள். அதன்படி செயல்படுங்கள்.

No comments:

Post a Comment