flipkart


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Friday, 16 March 2018

வாழைத்தண்டு சூப்


​ வாழைத்தண்டு சூப் 

தேவையான பொருட்கள்:​

நறுக்கிய வாழைத்தண்டு - 1 கப்
வெங்காயம் - 3
தக்காளி - 1 (சிறியது)
காய்ந்த மிளகாய் - 1
கொத்தமல்லி இலை - 1 கைப்பிடி
கறிவேப்பிலை - 1 கொத்து
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
மிளகு - அரை டீஸ்பூன்
சீரகம் - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :​

  தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும்.

  வெங்காயம், தக்காளி, காய்ந்த மிளகாய், கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை, இஞ்சி பூண்டு விழுது அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

  பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும்.

  இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய வாழைத்தண்டு சேர்த்து 6 கப் நீர் விட்டு அடுப்பை குறைத்து கொதிக்க விடவும்.

  பாதி வெந்ததும் பொடி செய்த தூள், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும்.

  கடைசியாக கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை தூவி இறக்கவும். சுவையான வாழைத்தண்டு சூப் தயார். உங்கள் காரத்துக்கு ஏற்ப மிளகு அளவை கூட்டவோ குறைக்கவோ செய்யலாம்.

No comments:

Post a Comment