flipkart


தமிழகம் , இந்தியா , அயல்நாடு , வணிகம், விளையாட்டு ,  திரை உலகச் செய்திகள் , பொது அறிவு, தினம் ஒரு துளி ,ஒரு நிமிட  யோசனை , நித்தம் ஒரு முத்து, நேயர்குரல்கள் ,வாரம் ஒரு வசந்தம், அறிவுப் பெட்டகம் ,கதை சொல்லும் நீதி  ,வாரம் ஒரு பாடல்,சிந்தனைச் சிறகு -அத்தனையும் மொத்தமாய் உங்கள் வாட்ஸ்அப்-பில் உங்களைத் தேடி தினந்தோறும் வருகிறது. . நற்றிணை  ஒலிச்செய்தியை நீங்களும்  கேட்டு ரசிக்க.., 1) பார்வை திறன் உள்ளவர்  என்றால் S JOIN 2) பார்வை மற்றுத் திறனாளி  என்றால் V JOIN  -என்று டைப் செய்து 8220999799-என்ற எண்ணுக்கு  வாட்ஸ்அப் மூலமாக அனுப்பி வையுங்கள். பதிவு எண் முதலில் வரும். நற்றிணை தொடர்ந்து வரும். தினமும் செவிமடுங்கள். #நற்றிணை ஒலிச்செய்தி#

Search This Blog

Friday, 18 May 2018

குட்கா ஊழல் குறித்து CBI விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

குட்கா ஊழல் குறித்து CBI விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று அறிவிக்கிறது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதை தடுக்கக் கோரி, திமுக எம்.ல்.ஏ. ஜெ.அன்பழகன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மேலும், குட்கா உள்ளிட்ட பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ய அமைச்சர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாகவும், அதனால், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், குட்கா ஊழல் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் என்பவர், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த மே 14ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், குட்கா ஊழல் குறித்து சி.பி.ஐ. விசாரிக்கலாமா என்பது குறித்து இன்று தீர்ப்பளிக்க உள்ளது

No comments:

Post a Comment